education

img

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு.... கோவை மாவட்டம் முதலிடம்... 

சென்னை
கொரோனா பதற்றத்துக்கு இடையே நடைபெற்ற பிளஸ்-1 பொதுத் தேர்வு  முடிவுகள் இன்று (வெள்ளி) வெளியாகியது. மொத்தம் 8.15 லட்சம் பேர் தேர்வு எழுதிய தேர்வில் 96.04% தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கம் போல மாணவர்களை விட மாணவியர்கள் தான் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். மாணவியர்கள் 97.49 சதவீதமும், மாணவர்கள் 94.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். 7,249 பள்ளிகளில், 2,716 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் பிளஸ் 1 தேர்வை எதிர்கொண்ட 2,819 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 2672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோவை முதலிடம்... 
நடப்பாண்டுக்கான பிளஸ் - 1 தேர்வு முடிவில் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கோவை மாவட்டத்தில் 98.10 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.90 சதவீத தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் 2-வது இடத்தையும், கரூர் மாவட்டம் 97.51 சதவீத தேர்ச்சியுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.  

;